ரத சப்தமி விழாவையொட்டி பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் சப்பர பவனி


ரத சப்தமி விழாவையொட்டி பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் சப்பர பவனி
x
தினத்தந்தி 25 Jan 2018 2:30 AM IST (Updated: 24 Jan 2018 7:03 PM IST)
t-max-icont-min-icon

ரத சப்தமி விழாவையொட்டி பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று சப்பர பவனி நடந்தது.

நெல்லை,

ரத சப்தமி விழாவையொட்டி பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ரத சப்தமி

பாளையங்கோட்டையில் வேதநாராயணன், அழகிய மன்னார், ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிவில் நடைபெறும் விழாக்களில் ரத சப்தமி விழா சிறப்பு பெற்றதாகும். ரத சப்தமி என்பது தை அமாவாசை நாளில் இருந்து 7–வது நாள் கொண்டாடப்படுவதாகும்.

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ரத சப்தமி உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேதநாராயணன், தாயார்கள் வேதவள்ளி, குமுதவள்ளி ஆகியோருக்கு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து 6 மணிக்கு முதலாவதாக சூர்யபிறை வாகனத்தில் ராஜகோபால சுவாமி வீதி உலா சென்றார். 8 மணிக்கு கருட வாகனத்திலும், 10 மணிக்கு சே‌ஷ வாகனத்திலும் வீதி உலா நடந்தது.

இந்திர விமானத்தில்....

மாலை 4 மணிக்கு இந்திர விமானத்தில் தாயாருடன் அழகிய மன்னாரும், அனுமன் வாகனத்தில் ராஜகோபாலரும் வீதி உலா வந்தனர். இரவு 6 மணிக்கு அன்னவாகனத்தில் அழகிய மன்னாரும், இரவு 9 மணிக்கு ராஜகோபால சுவாமி சந்திரபிறை வாகனத்திலும் வீதி உலா வந்தனர். ஒரே நாளில் 7 வாகனங்களில் சப்பர பவனி நடந்தது. ரத வீதிகளில் திரளான பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர்.


Next Story