சுரண்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்


சுரண்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2018 2:00 AM IST (Updated: 24 Jan 2018 8:10 PM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

சுரண்டை,

சுரண்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பஸ் சிறைபிடிப்பு

சுரண்டையில் இருந்து தென்காசிக்கு நேற்று முன்தினம் மாலையில் அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் சுரண்டை அரசு கல்லூரி மாணவர்கள் ஏராளமானவர்கள் சென்றனர். சுரண்டை அருகே பஸ் சென்று கொண்டு இருந்த போது, பஸ்சில் இருந்த மாணவர்கள் சத்தமாக பேசிய வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டக்டர் கண்டித்தார். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து சத்தம் போட்டு பேசி வந்தனர்.

இதுகுறித்து கண்டக்டர், பஸ் டிரைவரான மத்தளம்பாறையைச் சேர்ந்த மாரி என்பவரிடம் தெரிவித்தார். அவர் பஸ்சை நிறுத்தி விட்டு மாணவர்களிடம் பேசினார். அப்போது, திடீரென்று அவர் மாணவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திடீரென்று பஸ்சில் இருந்து கீழே இறங்கி பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து உடனடியாக சுரண்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் இந்த பிரச்சினை சம்பந்தமாக மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Next Story