இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும், மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும், மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தமிழகத்தை சேர்ந்த 180 படகுகள் இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்டு காங்கேசம் துறைமுகம், மன்னார் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கடந்த 2 மாதங்களில் மட்டும் 113 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ராமேசுவரத்தை சேர்ந்த 2 மீனவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர்கள் இலங்கையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்த நிலையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 4 மாதத்துக்கு முன்பு 42 படகுகளை விடுத்து இலங்கை அரசு உத்தரவிட்டது. இதில் 26 படகுகள் தமிழகம் கொண்டு வரப்பட்டது. மீதமுள்ள 16 படகுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. இதுகுறித்து நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் பாம்பன் அருளானந்தம் கூறியதாவது:- கடந்த காலங்களில் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் கடந்த 4 மாதத்தில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பது மிகவும் தாமதமாக உள்ளது. இந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழகத்தை சேர்ந்த மீனவர்களும், பக்தர்களும் கலந்துகொள்ள இலங்கை அரசும், கடற்படையினரும் அழைப்பு விடுத்துஉள்ளனர். ஆனால் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை மட்டும் கைது செய்து செல்கின்றனர். இது எந்த வகையில் நியாயமானது. முற்றிலும் ஏமாற்று வேலையாக உள்ளது. எனவே தமிழக மீனவர்களையும், படகுகளையும் கச்சத்தீவு திருவிழாவுக்கு முன்பாகவே விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story