காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அமைச்சுப் பணியாளர்கள்
காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் காவல்துறையில் காலியாக அனைத்து அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணிக்காக காத்திருப்பவர்களுக்கு காவல்துறை மற்றும் பிறதுறைகளில் பணி நியமனம் செய்ய வேண்டும், புதிதாக வழங்கப்பட்ட களப்பணியாளர்களுக்கு இணையான அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும், நிர்வாக காரணங்களுக்காக பணியிடமாறுதல் செய்வதை நிறுத்த வேண்டும்.
இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சுப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 2 நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவதென முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நேற்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அமைச்சுப் பணியாளர்களும் தலைவர் துரைராஜ், செயலாளர் இளங்கோவன், துணை தலைவர் கஜேந்திரன் தலைமையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். தங்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்றாவிட்டால் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், அதனை தொடர்ந்து மாநில மைய முடிவின்படி அடுத்த கட்ட போராட்டத்திலும் ஈடுபட போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story