நகராட்சியை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்


நகராட்சியை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:00 AM IST (Updated: 25 Jan 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

அதிக வரி விதித்திருப்பதாக கூறி எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்பு ஆகியவற்றிற்கு அதிக வரி விதித்திருப்பதாக கூறியும் அதனை கண்டித்தும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி ஆகியோர் வரவேற்று பேசினர். பதிவுஜமால், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது தங்கப்பாண்டியன் பேசுகையில், நகராட்சியில் அதிக வரி வசூல் செய்யக் கூடாது என அரசாணை போட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனை பின்பற்றி வரி விதிப்பினை குறைக்க நகராட்சி நிர்வாகம் தவறும்பட்சத்தில் பொதுமக்களுடன் இணைந்து உண்ணாவிரதம் இருப்போம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்கழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி, இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார், துணை அமைப்பாளர் ஆனந்த், கருப்பழகு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story