பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை,
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில துணை தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சேகர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் சேலத்தில் இருந்து கோவை வரை உள்ள ஏராளமான பஸ் வழித்தடங்களை விலைக்கு வாங்கி உள்ளார். இதன் பின்னரே தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. நான் எந்த அமைச்சரை கூறுகிறேன் என அந்த அமைச்சருக்கு புரியும். இது பொய் என்றால் அவர் என் மீது வழக்கு தொடரலாம்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் இவர்களில் யாரும் ஆட்சியை கலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள். இவர்கள் ஆட்சியில் இருக்கும் காலத்திற்குள் அனைத்து சாலைகள், பாலங்கள் என அனைத்து ஒப்பந்தங்களையும் முடிக்க வேண்டும் என பார்க்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கோவைக்கு வந்து இங்கு பாதுகாப்பு அமைச்சக பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். இது குறித்து அவர், தன்னை வரவேற்க வந்த உள்ளூர் அமைச்சரிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல், நிகழ்ச்சியின் போது அறிவித்து உள்ளார். இதனால் உள்ளூர் அமைச்சர் ஏன் என்னிடம் சொல்லாமல் அறிவித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வு காரணமாக தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story