உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி இருந்த நைஜீரியர்கள் 6 பேர் கைது
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி இருந்த 6 நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
பின்னலாடை நகரமான திருப்பூரில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். இதில் நைஜீரியர்கள் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் திருப்பூரில் தங்கி உள்ளனர்.
இவர்கள் இங்கு தங்கி இருந்து இரண்டாம் தர பனியன்களை எடுத்து தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மேலும், பலர் குடோன்கள், பனியன் நிறுவனங்களையும் திருப்பூரில் நடத்தி வருகின்றனர். எந்த ஆவணங்களும் இன்றி இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களையும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
திருப்பூரில் நீண்ட காலமாக தங்கி இருக்கும் இவர்கள் அவ்வப்போது சட்டவிரோதமான சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், வெளிநாட்டவர்கள் என்பதால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதில் போலீசாருக்கும் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பூரில் உள்ள நைஜீரியர்களில் ஏராளமானோர் கல்வி மற்றும் சுற்றுலா விசாக்களில் வந்து நீண்டநாள் இங்கு தங்கி இருப்பதாகவும், இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள், பனியன் குடோன்கள் நடத்தி வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை விசாரித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகர கமிஷனர் நாகராஜன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் படி உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கும் வெளிநாட்டவர்கள் குறித்த விசாரணையில் போலீசார் கடந்த சில வாரங்களாக தீவிரமாக இறங்கினார்கள். நைஜீரியர்களின் சங்கம் மூலமும் இதற்கான எச்சரிக்கை நோட்டீஸ்கள் காதர்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் ஒட்டப்பட்டன.
இந்த நிலையில் திருப்பூர் காலேஜ் ரோட்டில் திருப்பூர் வடக்கு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நைஜீரியர்களை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அவர்களை பிடித்து மேலும் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது இங்கு தங்கி இருப்பதற்காக பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களையும் போலீசார் எடுத்து வரும்படி கூறி, அதை சோதனை செய்தனர். அதில் 4 நைஜீரியர்கள் போலி விசா மூலம் திருப்பூரில் தங்கி இருப்பதும், 2 பேர் எந்த வித ஆவணங்களும் இல்லாமல் தங்கி இருந்து பனியன் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, போலி விசாவில் இங்கு வந்ததாக ஒகிதி மைக்கேல் (வயது28), பியாடி என்னெவ் அவே(39), சன்டேமேத்யூ(38), கெனட் ஒடிடிகா(41) ஆகியோரையும், எந்த வித ஆவணங்களும் இல்லாமல் தங்கி இருந்ததாக ஒகமோ சின்னோ பாலினே(25), பாலினே அபுஜி(38) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போல ஏராளமானோர் திருப்பூரில் தங்கி இருப்பதாகவும், அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காதர்பேட்டை மற்றும் ராயபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story