பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: மாணவர் அமைப்பினர் சாலை மறியல், பெண்கள் உள்பட 15 பேர் கைது


பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: மாணவர் அமைப்பினர் சாலை மறியல், பெண்கள் உள்பட 15 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2018 4:00 AM IST (Updated: 25 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஜனநாயக வக்கீல்கள் சங்கம் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் 15 பேர் அண்ணாசாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் ஜனநாயக வக்கீல்கள் சங்கம் (டி.ஏ.ஏ.) மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம் (ஆர்.ஒய்.ஏ.) சார்பில் 15 பேர் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி முன்பாக உள்ள அண்ணாசாலையில் நேற்று காலை அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக மறியலில் ஈடுபட்ட கண்ணன், சங்கர் ஆகியோர் கூறுகையில், “பஸ் கட்டணத்தை இவ்வளவு அதிகமாக உயர்த்தி மக்களை இந்த அரசு வஞ்சித்து இருக்கிறது. உடனடியாக இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்”, என்றனர். சாலை மறியல் போராட்டத்துக்கு 2 நிமிடங்கள் முன்னதாக தான், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அந்தவழியாக கவர்னர் மாளிகை நோக்கி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story