பிரெஞ்சு பள்ளி முன்பு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
விடுமுறையை மாற்றியதற்கு எதிர்ப்பு: பிரெஞ்சு பள்ளி முன்பு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி
புதுவை விக்டர் சிமோன் வீதியில் லிசே பிரான்சே பிரெஞ்சு பள்ளி உள்ளது. இங்கு மழலையர் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை உள்ளது. இதில் சுமார் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். புதுவையில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவது போல இந்த பள்ளிக்கும் மே மாதம் விடுமுறை விடப்படும்.
ஆனால் பிரான்ஸ் நாட்டில் பள்ளிகளுக்கு ஜூலை மாதம் தான் கோடை விடுமுறை விடப்படும். இந்தநிலையில் இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு முதல் லிசே பிரான்சே பள்ளியில் மே மாதத்திற்கு பதில் ஜூலை மாதம் விடுமுறை விடப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வழக்கமாக நடைமுறையில் இருப்பதையே நீடிக்க வேண்டும் என்று கோரி லிசே பிரான்சே பள்ளி அருகே நேற்று காலை மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story