சிறந்த கல்வியை கற்பதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் அடையலாம் கலெக்டர் பேச்சு
சிறந்த கல்வியை கற்பதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் அடையலாம் என்று சேலத்தில் நடந்த தேசிய பெண் குழந்தைகள் தினவிழாவில் கலெக்டர் ரோகிணி கூறினார்.
சேலம்,
சேலம் காந்தி மைதானத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, குழந்தைகள் நலக்குழும தலைவர் சேவியர், மாவட்ட விளையாட்டு அலுவலர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு பள்ளி மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி கலெக்டர் ரோகிணியும், பள்ளி மாணவிகளும் வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை கலெக்டர் முன்னிலையில் மாணவிகள் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ஓவியம், பேச்சு, வினாடி-வினா, இசை நாற்காலி, மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் ரோகிணி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், அவர் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்த குழந்தைகளுக்கு ரோஜா பூவை கொடுத்து தேசிய பெண் குழந்தைகள் தினவிழா வாழ்த்துகளை கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
விழாவில் மாணவிகள் மத்தியில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-
பெண் குழந்தைகளுக்கான பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கிலும், பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ந் தேதி அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பெண் குழந்தைகள் தங்களின் கல்விக்கு தடையாக உள்ள அனைத்து தடை கற்களையும் தாண்டி கல்வியில் வெற்றி பெற வேண்டும். சிறந்த கல்வியை கற்பதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் அடையலாம்.
பெண் குழந்தைகளை 18 வயது நிறைவடைவதற்கு முன்பு திருமண வாழ்வில் தள்ளுவது தவறாகும். அதேபோல் அவர்களை குழந்தை தொழிலாளர்களாகவும், பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்துவதும் மிகப்பெரும் குற்றமாகும். இத்தகைய குற்றங்களிலிருந்து நம் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
மராட்டிய மாநிலத்தில் கிராம பகுதியில் விவசாய குடும்பத்தில் மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்த என்னை, எனது பெற்றோர் பெண் குழந்தை என ஒதுக்கி விடாமல் அடிப்படை கல்வியை வழங்கினர். இதன் மூலம் கல்வியின் அவசியம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை உணர்ந்து பொதுமக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்ற லட்சியத்தை குறிக்கோளாக கொண்டு கல்வியை தொடர்ந்தேன்.
அனைத்து நிலைகளிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பயின்று இந்திய ஆட்சிப்பணிக்கான (ஐ.ஏ.எஸ்) தேர்வை எழுதி வெற்றி பெற முடிந்தது. இதன் மூலம் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக உங்கள் முன் உள்ளேன். பெண் குழந்தைகள் ஆகிய நீங்கள் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி உயர்ந்த கல்வியினை பெற்று வளமாக வாழ வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ரோகிணி பேசினார்.

Related Tags :
Next Story