குடியரசு தினவிழாவையொட்டி சேலத்தில், கலெக்டர் ரோகிணி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்
சேலத்தில் குடியரசு தினவிழாவையொட்டி கலெக்டர் ரோகிணி நாளை தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம்,
நாடு முழுவதும் நாளை(வெள்ளிக்கிழமை) குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை காலை 8 மணிக்கு சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டு, அரசு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
அதையொட்டி காந்தி மைதானத்தில் விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. விழா நடைபெறும் காந்தி மைதானத்தில் இன்று(வியாழக்கிழமை) முதல் பாதுகாப்பு பணிக்காக மாநகரில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ளனர். இன்று மாலையிலேயே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் மைதானம் வந்துவிடும்.
இதேபோல் மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்படுகின்றனர். இவர்கள் இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாநகரம் மற்றும் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று ஏதேனும் அசாம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பஸ் நிலையங்கள், கோவில்கள், பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ரோகிணி நேற்று ஆலோசனை நடத்தினார். விழா நடைபெறும் மைதானத்தை சமப்படுத்தி தூய்மையாக வைத்திருக்கவும், நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், கலைநிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளை பாதுகாப்பான முறையில் அழைத்து வரவும், காவல்துறையின் சார்பில் உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திடவுடம் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ரோகிணி அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையார் சதீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருள்ஜோதிஅரசன், அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நாளை காலை 8.10 மணிக்கு, மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு நடக்கிறது. சிறந்த பொதுசேவை செய்தவர்களுக்கு பாராட்டும், சிறந்த பணியாளர்களுக்கு நற்சான்றிதழும் வழங்கப்படுகிறது. நிறைவாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடக்கிறது.

Related Tags :
Next Story