பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:15 AM IST (Updated: 25 Jan 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டை அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் இருந்து கல்லூரி, மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென அரசம்பட்டு கூட்ரோட்டில் பஸ் கட்டணம் உயர்வு மற்றும் தடம் எண் 7 டவுன் பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, தாசில்தார் அரிதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story