குடிநீரில், சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் சாலை மறியல்
குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்க வலியுறுத்தி நாகையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை மருந்து கொத்தள ரோடு பகுதியில் தோல்கிடங்கு, கொடிமரத்து சந்து, காட்டு நாயக்கன்தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 500-க்கும் மேறபட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு நாகை நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக வினியோகிக்கப்பட்டு வரும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தோல்கிடங்கு, கொடிமரத்து சந்து, காட்டுநாயக்கன் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று மருந்து கொத்தள ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை நகராட்சி ஆணையர் ஜான்சன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடந்த சில நாட்களாக மேற்கண்ட பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
நடவடிக்கை
இதனால் இந்த தண்ணீரை குடிக்கும்போது வாந்தி, பேதி உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்னும் 2 நாட்களில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
2 நாட்களில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் கூறினர். பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story