ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் படகு குழாம் அமைப்பதற்கான இடங்களை அதிகாரிகள் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் படகு குழாம் அமைப்பதற்கான இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்,
பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்து உள்ளது. வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி ஆறு விளங்குவதால், நல்ல பருவமழை பெய்தால் ஆண்டு முழுவதும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்கும். எனவே இங்கு படகு குழாம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தனர். தற்போது அந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி, தென்கால், வடகால் வழியாக பாசன குளங்களுக்கு செல்கிறது.
காணும் பொங்கலை கொண்டாடும் வகையில், தடுப்பணைக்கும், புதிய பாலத்துக்கும் இடையில் தாமிரபரணி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டது. அப்போது அதனை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், தடுப்பணையில் படகு குழாம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் சீனிவாசன், உதவி அலுவலர் கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சமுத்திரம், தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் ஆகியோர் நேற்று மதியம் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், படகு தளம் அமைப்பதற்காக ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம், பிச்சனாதோப்பு, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளை பார்வையிட்டனர்.
பின்னர் அதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் படகு குழாம் அமைக்கவும், படகு தளம் அமைக்கவும் இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதற்கான இடங்களை தேர்வு செய்த பின்னர் படகு உள்ளிட்ட தளவாட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, விரைவில் படகு சோதனை ஓட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story