பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள்-அரசியல் கட்சியினர் போராட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் மாணவர்கள்- அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை,
பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் நேற்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இதேபோல தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் மதன்குமார் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் பேசினர். இதில் சங்க பொருளாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க.-விடுதலை சிறுத்தைகள்
இதேபோல மாவட்ட பா.ஜ.க. சார்பில். பஸ் கட்டண உயர்வை கண்டித்து புதுக்கோட்டை திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேதுபதி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் குப்புராமு கலந்து கொண்டு பஸ் உயர்வை கண்டித்து பேசினார். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் சிவசாமி கண்டியர், தியாகராஜன், நகர தலைவர் சுப்பிரமணியன், நகர பொது செயலாளர் லெட்சுமணன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் விடுதலைகனல், வடக்கு மாவட்ட செயலாளர் சசிகலைவேந்தன் தலைமையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில கட்சி பொறுப்பாளர் தங்கத்துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story