மும்பையில் எதிர்க்கட்சிகள் நாளை பேரணி


மும்பையில் எதிர்க்கட்சிகள் நாளை பேரணி
x
தினத்தந்தி 25 Jan 2018 4:12 AM IST (Updated: 25 Jan 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

பீமா- கோரேகாவ் சம்பவத்தை தொடர்ந்து மராட்டியத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மும்பை,

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பொதுமக்களை காக்க வலியுறுத்தி குடியரசு தினமான நாளை (வெள்ளிக்கிழமை) மும்பையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார், கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் மும்பை கேட்வே ஆப் இந்தியாவில் பேரணி நடத்த அனுமதி கோரி மும்பை துறைமுக அறக்கட்டளையிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டது. ஆனால் அதே நாளில் மாநில அரசின் சிறுபான்மையினர் துறையினர் அங்கு தங்கள் நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றுள்ளதால், அங்கு பேரணிக்கு அனுமதி வழங்க துறைமுக அறக்கட்டளை மறுத்து விட்டது. 

Next Story