பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர்கள் அறிக்கை
x
தினத்தந்தி 26 Jan 2018 2:30 AM IST (Updated: 25 Jan 2018 6:56 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன் (கிழக்கு), அப்துல் வகாப் (மாநகர்) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நெல்லை,

நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன் (கிழக்கு), அப்துல் வகாப் (மாநகர்) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நாளை (சனிக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி நெல்லை கிழக்கு, மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை ளகாலை 10 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட் ஜவகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story