கடையில் பதுக்கிய 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது


கடையில் பதுக்கிய 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2018 4:30 AM IST (Updated: 26 Jan 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

போரூரில் கடையில் பதுக்கிய 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை போரூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் பதுக்கி வைத்து ரகசியமாக விற்கப்பட்டு வருவதாக வந்த தகவலையடுத்து போரூர் உதவி கமி‌ஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சங்கர்நாராயணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் போரூரில் குன்றத்தூர் சாலையில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. போலீசார் அந்த கடையில் அதிரடியாக சோதனை செய்தனர். அதில் அந்த கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்தது தெரிந்தது.

அந்த கடையில் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள சுமார் 25 கிலோ எடைகொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையில் வேலை செய்யும் ஊழியரான முசாதிக்(வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கடையின் உரிமையாளர் நிலாமுதீன்(50) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story