பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை,
தமிழக அரசு சமீபத்தில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குட்டியப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. கார்வேந்தன், முன்னாள் மாநில செயலாளர் செல்வகுமார், கோட்ட பொறுப்பாளர் பாயிண்ட் மணி, விஜயராகவன், நகர தலைவர் மன்மதராஜ், செயலாளர் சின்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story