12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
உடுமலையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 139 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கவேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை முழுமையாக அமலாக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கவேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை தொழிலாளர்களுக்கு பாதகமாக திருத்தக்கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது.
காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். போனஸ் உச்சவரம்புகளை நீக்கவேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., எம்.எல்.எப்., எச்.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தை நடத்தின.
அதன்படி உடுமலை மத்திய பஸ்நிலையம் முன் நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. செயலாளர் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. சந்திரராஜன், எல்.பி.எப்.துரைசாமி, ஐ.என்.டி.யு.சி. மணி உள்பட தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியிட முடியாத படி சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 139 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் உடுமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story