ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2018 4:00 AM IST (Updated: 26 Jan 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெல் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் 6 வீடுகளில் திருட்டு போனது. பாதுகாப்பு குறைவின் காரணமாக இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. பெல் குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும், குடியிருப்பு பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெல் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெல் நிறுவனத்தில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் போட்டனர். 

Next Story