பஸ் கட்டண உயர்வு கண்டித்து மாணவ-மாணவிகள் மனித சங்கிலி போராட்டம்
தமிழக அரசு பஸ் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.
பொன்மலைப்பட்டி,
தமிழக அரசு பஸ் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று காட்டூர் உருமு தனலட்சுமி கல் லூரியில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மாணவ-மாணவிகள் கண்களைக் கறுப்புத் துணியால் மறைத்தபடி நூதன முறையில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். அப்போது பஸ் கட்டண உயர்விற்காக தமிழக அரசு நியமித்த குழுவைக் கலைக்க வேண்டும், இருமடங்காக உயர்த்திய கட்டணத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் முழுமையாக பங்கேற்கும் வகையில் சர்வக் கட்சிகள் இணைந்து பந்த் அறிவித்து போராட்டம் நடத்த வேண்டும். இக்கோரிக்கை குறித்து போலீசாரால் கைதானவர்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

Related Tags :
Next Story