அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர்,
ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகின்றது. வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் நடைமுறைகள் குறித்தும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தேர்தலில் பங்கேற்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி, காமராஜர் வளைவு, ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்களை மாவட்ட வருவாய் அதிகாரி வாசிக்க அவரை தொடர்ந்து மாணவ-மாணவிகள் கூறி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
பின்னர் தொடங்கிய ஊர்வலமானது சங்குப்பேட்டை, பாலக்கரை, புதிய பஸ் நிலையம் வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தேர்தலில் பங்கேற்று மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும்” உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர். இதில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) உமாமகேஸ்வரி, வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், சிவா (தேர்தல் பிரிவு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மீன்சுருட்டி கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை வருவாய் துறையினர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் ஆண்டிமடம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் டீனாகுமாரி தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி நான்குரோடு, கடைவீதி வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, மண்டல துணை வட்டாட்சியர் வேலுமணி, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சுசீலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, ஆண்டிமடம் வருவாய் அதிகாரி பிரபு, கிராம நிர்வாக அலுவலர்கள் மணிவண்னன், ரவி, கலியமூர்த்தி மற்றும் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story