பஸ் கட்டண உயர்வை எதிர்த்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டம்


பஸ் கட்டண உயர்வை எதிர்த்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2018 4:15 AM IST (Updated: 26 Jan 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை எதிர்த்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள்.

ஆரல்வாய்மொழி,

தமிழக அரசு பஸ்கட்டணத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தியது. இதற்கு பல்வேறு கட்சிகளும், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டங்களிலும், சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் ஆரல்வாய்மொழியில் உள்ள அரசு உதவி பெறும் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை இக்கல்லூரியில் படிக்கும் சுமார் 1300 மாணவ-மாணவிகள் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தனர்.

காலை 10 மணியளவில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் பகல் 12.15 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story