பஸ்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


பஸ்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2018 3:15 AM IST (Updated: 26 Jan 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து, பா.ம.க. சார்பில் நேற்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பரசுராமன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் (வடக்கு) ஜோதிமுத்து, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆரோக்கியதாஸ், வடக்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, தெற்கு மாவட்ட தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பஸ்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் திருப்பதி உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.


Next Story