பா.ஜ.க.வினர் ஐ.லியோனியின் வீட்டை முற்றுகையிட முயற்சி 20 பேர் கைது
பட்டிமன்ற பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல்,
பட்டிமன்ற பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திண்டுக்கல் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகர பொதுச்செயலாளர் லட்சுமணன் தலைமையில் ஏராளமான பா.ஜ.க.வினர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு நேற்று மாலை திரண்டனர். பின்னர் ஐ.லியோனியை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.
இதையடுத்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று ஐ.லியோனியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி மற்றும் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story