பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி 2–வது நாளாக கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினர், அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்,
கடந்த 20–ந்தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினர், அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பின்னர் கல்லூரிக்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் சுமார் 300 மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story