பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் பஸ் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்,
சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். கவுரவத்தலைவர் கிருஷ்ணராஜ், வட்டச்செயலாளர் வாசுதேவன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுராந்தகம் காந்தி சாலையில் இருந்து ஊர்வலமாக மதுராந்தகம் பஸ் நிலையம் சென்ற சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் பஸ்கட்டண உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தி பின்னர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் அந்தோனிஸ்டாலின் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Related Tags :
Next Story