தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 150 பேர் கைது
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 150 பேர் கைது செய்தனர்.
புதுச்சேரி,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ட ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம், நிதியம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ராஜா தியேட்டர் அருகில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாநில பொதுசெயலாளர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி. செயலாளர் நரசிம்மன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் அபிஷேகம், ஏ.ஐ.டி.யூ.சி. செயல் தலைவர் நாரா. கலைநாதன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. தலைவர் பாலசுப்பிரமணியன், புருஷோத்தமன் உள்பட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கோஷங்களை எழுப்பினர். இதுபற்றிய தகவல் அறிந்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அண்ணாசாலையில் இருந்து சாலை மறியல் போராட்டம் நடத்திய ராஜா தியேட்டர் பகுதிக்கு அவர்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர்.

Related Tags :
Next Story