பந்திப்பூர் வனப்பகுதியில் 2 புலிகள், ஒரு யானை செத்து கிடந்தன
பந்திப்பூர் வனப்பகுதியில் 2 புலிகள், ஒரு யானை செத்து கிடந்தன. காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளேகால்,
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா எல்லை வரை பரந்து விரிந்துள்ள இந்த வனப்பகுதியில் இந்தியாவிலேயே அதிக புலிகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சில மாதங்களாக பந்திப்பூர் வனப்பகுதியில், புலிகள், யானைகள் செத்த வண்ணம் உள்ளன.
புலிகள், யானைகள் செத்ததற்கான காரணங்கள் தெரியாமல் வனத்துறையினர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பந்திப்பூர் வனப்பகுதியில் 2 புலிகளும், ஒரு யானையும் செத்துள்ளன. இதுகுறித்த விவரம் பின்வருமாறு:-
பந்திப்பூர் வனப்பகுதி எல்லையில் அங்கலா கிராமத்திற்கு அருகே உள்ள இரிகெரே பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர், துர்நாற்றம் வந்த திசையை நோக்கி சென்று பார்த்தனர். அப்போது, அந்தப்பகுதியில் 2 புலிகள் அழுகிய நிலையில் செத்து கிடந்தன. அதன் அருகே ஒரு யானையும் செத்து கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரி அம்பாடி மாதவ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் நாகராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.பின்னர் அந்த 2 புலிகளின் உடல்களும், யானையின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவை செத்ததற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதையடுத்து 2 புலிகள் மற்றும் யானையின் உடல்கள் அதேப்பகுதியில் எரிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி அம்பாடி மாதவ் கூறுகையில், 2 புலிகளும், யானையும் செத்ததற்கான காரணம் தெரியவில்லை. அவை செத்து 3 நாட்கள் இருக்கலாம். புலிகள் மற்றும் யானையின் உடலில் சிறிது பாகங்கள் எடுத்து பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவு வந்த பிறகு தான் காரணம் தெரியவரும் என்றார். புலிகள், யானை செத்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story