மகதாயி பிரச்சினைக்காக முழு அடைப்பு போராட்டம் பஸ் - ஆட்டோக்கள் ஓடவில்லை
மகதாயி பிரச்சினையில் பிரதமர் தலையிட கோரி கர்நாடகத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பஸ்-ஆட்டோ போக்குவரத்து முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பெங்களூரு,
மகதாயி நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி மராட்டியம் வழியாக கோவாவில் நீண்ட தூரம் பயணித்து கடலில் கலக்கிறது.
கர்நாடகம், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த நதி ஓடுவதால், அந்த மூன்று மாநிலங்களும் அதிகப்படியான நீரை உரிமை கோருகிறது. அதனால் தண்ணீர் பங்கீடு செய்ய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது.
மகதாயி நதியில் இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்க கோரி வட கர்நாடக விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்க அனுமதி கோரிய கர்நாடக அரசின் மனுவை நடுவர் மன்றம் நிராகரித்தது. இதனால் விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது.
40 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் உள்ள இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வலியுறுத்தி ஜனவரி 25-ந் தேதி (அதாவது நேற்று) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்தார். அதன்படி கர்நாடகத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி தலைநகர் பெங்களூருவில் 7,000 பி.எம்.டி.சி. பஸ்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடவில்லை. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்நாடக அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பஸ்களும் இயக்கப்படவில்லை.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நகரில் மெட்ரோ ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் ஓடின. ஆனால் மெட்ரோ ரெயில்களில் வழக்கத்தைவிட குறைந்த அளவே பொதுமக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில் நிலையங்கள் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன.
பெங்களூருவில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் எம்.ஜி.ரோடு, கெம்பேகவுடா ரோடு, ஜே.சி.ரோடு, ஓசூர் ரோடு, லால்பாக் ரோடு, வாட்டாள் நாகராஜ் ரோடு, சேஷாத்திரி ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளில் வாகனங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஓடின. இதனால் அந்த சாலைகள் வாகன நெரிசல் இன்றி காணப்பட்டன.
அதேப் போல் இருசக்கர வாகனங்கள், குறைந்த அளவில் கார்கள், ஆட்டோக்களை சாலைகளில் பார்க்க முடிந்தது. நகரில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய அளவிலான பலசரக்கு கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைத்தது. பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.
மெஜஸ்டிக்கில் உள்ள பி.எம்.டி.சி. மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்கள் பஸ்களின் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. வெளியூர்களில் இருந்து ரெயில்களில் வந்தவர்கள் மெட்ரோ ரெயில் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். ஒரு சில ஆட்டோக்கள் ஓடின. அதிலும் சிலர் பயணித்தனர். ஆனால் ஆட்டோ கட்டணம் வழக்கத்தை விட 2, 3 மடங்கு அதிகமாக இருந்தது. ஆயினும் பல பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாயினர்.
முழுஅடைப்பை முன்னிட்டு பெங்களூருவில் மென்பொருள் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வீடுகளில் இருந்தபடியே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்தனர். மேலும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களும் இயங்கவில்லை. இதனால் அவற்றின் ஊழியர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் அந்த நிறுவனங்களில் ஆடை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.
கர்நாடக அரசு அலுவலகங்கள் வழக்கம்போல திறக்கப்பட்டு இருந்தன. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஊழியர்கள் வந்திருந்ததால் அரசு பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. குறைந்த அளவில் ஊழியர்கள் வேலைக்கு வந்திருந்தனர். மருத்துவமனைகள், மருந்து கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.
பெங்களூரு அவென்யூ ரோடு, மல்லேசுவரம் பகுதிகளில் ஒரு சில கடைகள் திறந்திருந்தன. அப்போது அங்கு வந்த போராட்டக்காரர்கள் கடைகளை மூடும் படி வியாபாரிகளிடம் கூறினர். சிலர் கடைகளை அடைக்க மறுத்தனர். இதனால் சிலர், ஒரு பேக்கரி மீது கல்வீசி தாக்கினர். இதில் பேக்கரியின் கண்ணாடிகளும், பாட்டில்களும் உடைந்து நொறுங்கின. மேலும் அவென்யூ ரோட்டில் சாலையோர கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. ஆனால் அங்கு சென்ற போராட்டக்காரர்கள் கடைகளை அடைக்க வலியுறுத்தி, கடைகளில் வைத்திருந்த பொருட்களை இழுத்து ரோட்டில் வீசினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அந்தப் பகுதியில் கடைகளை வியாபாரிகள் மூடினர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழக்கம்போலே இயக்கப்பட்டன. இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் வழக்கம் போல் திறந்திருந்தன. ஒரு சில பகுதிகளில் உணவகங்கள் திறக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததால் பெங்களூருவில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியூர்களில் இருந்து பெங்களூரு வந்தவர்களும் அவதிக்கு உள்ளாயினர்.
முழுஅடைப்பையொட்டி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடத்தப்பட்ட ஊர்வலம் பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து புறப்பட்டு மைசூரு வங்கி வழியாக சுதந்திர பூங்காவை அடைந்தது. இதில் பல்வேறு கன்னட சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் மஞ்சள், சிகப்பு நிறத்தை கொண்ட கர்நாடக கொடியை ஏந்தி இருந்தனர்.
வாட்டாள் நாகராஜ் உள்பட முன்னணி நிர்வாகிகள் திறந்த லாரி மீது அமர்ந்தபடி ஊர்வலத்தில் வந்தனர். இந்த ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முக்கியமான சந்திப்புகளில் அதிக எண்ணிக்கையில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா தலைமையில் அந்த அமைப்பினர் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதேபோல் அந்த அமைப்பினர் மாநிலம் முழுவதும் ரெயில் நிலையங்களுக்குள் புகுந்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மாநிலத்தின் பிற பகுதிகளில் முழு அடைப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்ததை பார்க்க முடிந்தது. தலைநகர் பெங்களூரு, துமகூரு, மண்டியா, மைசூரு, ராமநகர், சாம்ராஜ்நகர், ஹாசன், சிக்கமகளூரு, உப்பள்ளி-தார்வார், பெலகாவி, கதக், தாவணகெரே உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்புக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது. அந்த பகுதிகளில் பஸ் போக்குவரத்து இருக்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Related Tags :
Next Story