சேலத்தில் குடியரசு தினவிழா: ரூ.27.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் தேசிய கொடி ஏற்றி வைத்து கலெக்டர் ரோகிணி வழங்கினார்
குடியரசு தின விழாவையொட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.27 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சேலம்,
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று 69-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி, காந்தி விளையாட்டு மைதானத்திற்கு காரில் வந்திறங்கினார். பிறகு அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் வரவேற்று கொடிக்கம்ப மேடைக்கு அழைத்துச் சென்றார்.அதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீசாரின் பாண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். இதைத்தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வண்ண வண்ண பலூன்களை கலெக்டர், விண்ணில் பறக்கவிட்டார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோரும் வண்ண பலூன்களை பறக்கவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, கலெக்டர் ரோகிணி திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். பின்னர், சேலம் மாவட்ட காவல்துறை மற்றும் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பும், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் ஆகியோரின் அணிவகுப்பும் நடத்தப்பட்டது. அதை கலெக்டர் ரோகிணி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஏற்றுக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த சாமியானா பந்தலில் அமர வைக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் இருந்த இடத்திற்கு கலெக்டர் ரோகிணி சென்று அனைவருக்கும் கதர் பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன் அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதையடுத்து அவர் சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 62 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் அணிவித்தார். இதைத்தொடர்ந்து, அரசுத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 210 பேரின் பணியை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, வருவாய்த்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறைகளின் மூலம் 29 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 20 ஆயிரத்து 159 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம் சாரதா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏத்தாப்பூர் ஏகலைவா பெண்கள் மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேலம் சி.எஸ்.ஐ. குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம் நெத்திமேடு ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 746 மாணவ, மாணவிகளின் தேச ஒற்றுமை, தேசபக்தி பாடல், தோடா நடனம், நாட்டுப்பற்று பாடல், தேசபக்தி பாடல், சமூக விழிப்புணர்வு போன்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சி.எஸ்.ஐ. குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் தேசபக்தி பாடல் கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குடியரசு தினவிழாவில், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிரானைட் தொழில் தொடர்பாக ஜெர்மனியை சேர்ந்த ஹெரிபட்-ஹெரிடர் தம்பதியினர் சேலம் வந்திருந்தனர். சேலத்தை சேர்ந்த குமரேசன் என்பவர், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த குடியரசு தினவிழாவை காண ஜெர்மனி நாட்டு தம்பதியினரை காந்தி மைதானத்திற்கு அழைத்து வந்திருந்தார். குடியரசு தினவிழாவை முழுமையாக கண்டு ரசித்த அவர்கள், தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டதை காணமுடிந்தது.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு சேலம் காந்தி மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழக்க செய்யும் கருவிகள் மூலம் போலீசார் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினர். மேலும், காந்தி மைதான நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கூண்டு அமைக்கப்பட்டு, மைதானத்திற்கு வந்த அனைவரும் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story