குடியரசு தின விழா கோலாகலம்: கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்
பாளையங்கோட்டையில் கோலாகலமாக நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் சந்தீப்நந்தூரி தேசிய கொடியை ஏற்றினார்.
நெல்லை,
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி காலை 7.55 மணிக்கு மைதானத்துக்கு வந்தார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றோர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் நின்றபடி சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதில் பேண்டு வாத்தியம் முழங்க போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் மிடுக்காக நடந்து வந்தனர். இந்த அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து கலெக்டர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் செல்லத்துரை, தாயம்மாள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். காவல்துறையில் சிறந்து பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிழ்களை வழங்கப்பட்டன.
முன்னாள் படைவீரர் நலன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சமூகநலத்துறை, தாட்கோ, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 53 பேருக்கு ரூ.29 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர், தேசிய கொடியின் வர்ணத்தை குறிக்கும் வகையில் மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார்.
சுதந்திரப் போராட்ட தியாகி மற்றும் மொழிக்காவலர் ஆகியோரின் குடும்ப உறுப்பினர் 10 பேருக்கு ஓய்வூதிய ஆணையும், 84 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் காவல்துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக பாதுகாப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள், பதக்கங்கள், கேடயங்கள், சேமிப்பு பத்திரங்கள் மற்றும் பரிசு புத்தகங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
பஞ்சாயத்து யூனியன்களின் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவாறு சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹிம் அபுபக்கர்,
தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துவதற்காக சிறப்பாக பணியாற்றிய அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த், சிறந்த முறையில் சமூக சேவை செய்த இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் சார்லஸ்பிரேம்குமார் உள்பட 421 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் விழிப்புணர்வு அலங்கார வாகனமும், நாட்டுப்புற நடன நிகழ்ச்சியும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நடந்த நிகழ்ச்சியும், தேசிய ஒருமைப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி நடந்த நடனமும் ரசிக்கும்படியாக இருந்தது.
குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளின் அன்பால் இணைவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தி காட்டினர். தலையில் கும்பம் வைத்து மாணவிகள் ஆடியதை அங்கு இருந்தவர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
நெல்லை மீனாட்சிபுரம் நகர்மன்ற மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் எங்கள் பாரதம் என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சி நடத்தி காட்டினர். நெல்லை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாட்டுப்புற வீர விளையாட்டுகளை நடத்தினர். கலை நிகழ்ச்சிகள் நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. விழா நிகழ்ச்சிகளை நெல்லை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு தொகுத்து வழங்கினார்.
விழாவில் எம்.பி.க்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுகுணாசிங், பயிற்சி கலெக்டர் இளம்பகவத், சேரன்மாதேவி உதவி கலெக்டர் விஷ்ணு, அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் ரேவதிபாலன், முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம், உதவி கலெக்டர் மைதிலி மற்றும் அதிகாரிகள், ஆசிரியாகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story