கோவையில், கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


கோவையில், கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2018 3:45 AM IST (Updated: 27 Jan 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறக்கோரி கோவையில் வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் தங்கமாரியப்பன், செயலாளர் முத்துராஜ், மாநில துணை பொது செயலாளர் அபிபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் மாணிக்கம் பேசியதாவது:-

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா உடனடியாக வெளியேற வேண்டும். மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு 100 சதவீத அனுமதி அளித்துள்ளது. உள்ளூர் வியாபாரிகளை பாதுகாக்க இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை எளிமை படுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து வியாபாரிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். வியாபாரிகள், தொழிலாளர்களின் நலன் கருதி உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை அரசு திரும்ப பெற வேண்டும். சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ரத்தினபுரி வணிகர் சங்க தலைவர் கோபால கிருஷ்ணன், லாரன்ஸ் துரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story