காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. காஞ்சீபுரத்தில் நடந்த விழாவில் கலெக்டர் பொன்னையா ரூ.2 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரத்து 82 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில் கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் தமிழக முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்களை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் ஏட்டு ஹேமேந்திரகுமார், வாலாஜாபாத் போலீஸ் ஏட்டு சுகுணா உள்பட 37 பேருக்கு வழங்கினார். விழாவில் அவர் மொத்தம் 121 பேருக்கு ரூ.2 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரத்து 82 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரி முத்தையா, மாவட்ட கனிமவளத்துறை உயர் அதிகாரி ஆர்.பெருமாள்ராஜா, மாவட்ட திட்ட அதிகாரி ஜெயக்குமார், காஞ்சீபுரம் நகராட்சி தனி அதிகாரி ஆர்.சர்தார், காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி, காஞ்சீபுரம் தாசில்தார் நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
காஞ்சீபுரம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மண்டல இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் ராஜ நந்தினி, துணைப்பதிவாளர்கள் வேலு, மனோகரன், உமாபதி, இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் கு.சேகர், ஆர்.என்.சீனிவாசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் வரதராஜி, துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் நாராயணமூர்த்தி, அமுதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார். இதில் வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஜே.அதியமான், உதவி பொது மேலாளர்கள் ராஜேந்திரன், சரவணன், ரமாதேவி, அண்ணா தொழிற்சங்க சிறப்பு தலைவர் வி.குணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டில் மாவட்ட நீதிபதி செல்வகுமார் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பார் சங்க தலைவர் பழனிசாமி, செயலாளர் பாலமுருகன் ஆகியோர் இனிப்புகளை வழங்கினார்கள். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஜெயசீலன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
சிங்க பெருமாள்கோவிலில் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கே.பால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலைக்கல்லுாரியில் தனியார் வங்கி துணைத்தலைவர் மதுசூதனன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அங்கு உள்ளவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
செங்கல்பட்டு எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். மேலும் அவர் சிங்கபெருமாள் கோவிலில் உள்ள முதியோர் காப்பகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
மதுராந்தகம் சப்-கலெக்டர் கிள்ளி சந்திரசேகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். மதுராந்தகம் தாசில்தார் கவுசல்யா தாலுகா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
செய்யூர் தாசில்தார் ராமச்சந்திரன் தாலுகா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஊர்காவல் படை அலுவலகம் போன்ற இடங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முரளி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் அந்தோனி ஸ்டாலின், செய்யூர் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் அந்தந்த போலீஸ் நிலையங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்கள்.

Related Tags :
Next Story