உடன்குடியில் பட்டப்பகலில் பெண்ணை அரிவாளால் வெட்டி 11 பவுன் நகை கொள்ளை
உடன்குடியில் வீடு புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டி, 11 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 65). முன்னாள் நகர பஞ்சாயத்து கவுன்சிலரான இவர், கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவருடைய மனைவி ஜெசிதோரா (64).
இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். எனவே, கனகராஜ், ஜெசிதோரா ஆகிய 2 பேரும் தங்களது வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று மாலை 4 மணி அளவில் கனகராஜ் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஜெசிதோரா சமையல் செய்வதற்காக வெங்காயத்தை உரித்து கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் நைசாக வீட்டுக்குள் நுழைந்து ஜெசிதோரா அணிந்து இருந்த நகைகளை பறிக்க முயன்றார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெசிதோரோ கூச்சலிட்டார். உடனே அந்த நபர், அங்கு கிடந்த அரிவாளால் ஜெசிதோராவின் முகம், கைகளில் சரமாரியாக வெட்டினார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ஜெசிதோரா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே அந்த நபர், ஜெசிதோரா அணிந்து இருந்த 8 பவுன் தங்க தாலிச்சங்கிலி, 3 பவுன் வளையல்களை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெசிதோரா தவழ்ந்தவாறு வந்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே ஜெசிதோராவை சிகிச்சைக்காக உடன்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அவரை நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஷீபாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டி, நகைகளை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெசிதோரா வசித்த வீடானது, அந்த தெருவின் கடைசியில் உள்ளதாலும், வீட்டைச் சுற்றிலும் காம்பவுண்டு சுவர், மரங்கள் இருந்ததாலும் அவரது அலறல் சத்தம் வெளியில் கேட்கவில்லை. உடன்குடியில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story