தாய், 2 மகன்கள் கொலை? ஆற்றில் பிணமாக மிதந்தனர்
குமரி மாவட்டத்தில் தாயும், 2 மகன்களும் ஆற்றில் பிணமாக மிதந்தனர்.
நித்திரவிளை,
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மங்காடு பகுதி தாமிரபரணி ஆற்றில் நேற்று அதிகாலையில் குளிக்கச் சென்றவர்களுக்கு திடீர் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆற்றுத்தண்ணீரில் ஒரு இளம்பெண் உடலும், அதன் அருகே 2 சிறுவர்களின் உடல்களும் மிதந்தன. போலீஸ் விசாரணையில் அவர்கள் 3 பேரும் நித்திரவிளை அருகே உள்ள வள்ளவிளை ததேயுபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், தாய்- 2 மகன்கள் என்றும் தெரியவந்தது.
பிணமாக மிதந்த இளம்பெண் பெயர் பேபி ஷாலினி என்கிற சங்கீதா (வயது 27). அவருடைய 2 மகன்கள் சஞ்சய் மிசியோ (7), பியு போபர்(5).
பேபி ஷாலினியும், அவருடைய கணவர் விஜயதாசனும் குடும்ப தகராறு காரணமாக கடந்த 2½ ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பேபி ஷாலினி, தன்னுடைய 2 மகன்களுடன் மேல்மிடாலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன்புதான் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினர். அவர்கள் நித்திரவிளை தெரு முக்கு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். விஜயதாசன் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கும் தொழிலாளி ஆவார். சில நாட்களுக்கு முன்புதான் அவர் ஆழ்கடல் மீன்பிடிப்பு பணிக்கு சென்றார். இதனால் வீட்டில் பேபி ஷாலினியும், 2 மகன்கள் மட்டும் இருந்தனர். இவர்களின் துணைக்காக பேபி ஷாலினியின் தந்தை மார்ட்டின் உடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு பேபி ஷாலினியும், அவருடைய 2 மகன்களும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அதன்பின்பு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. மகளையும், பேரன்களையும் பல இடங்களில் மார்ட்டின் தேடியுள்ளார்.
இந்தநிலையில்தான் நேற்று காலையில் நித்திரவிளை அருகே தாமிரபரணி ஆற்றில் பேபி ஷாலினியும், அவருடைய 2 மகன்களும் பிணமாக மிதந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பேபி ஷாலினியின் கணவர் விஜயதாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேபி ஷாலினியின் செல்போனுக்கு யார்-யார் போன் செய்திருக்கிறார்கள் என்ற தகவல்களையும் போலீசார் சேகரித்தனர். அப்போது, அந்த மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் ஒருவர் பேபி ஷாலினியின் செல்போனில் அடிக்கடி பேசி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் பேபி ஷாலினியின் உறவினர்கள் 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் கூறும் போது, “பேபி ஷாலினியையும், அவருடைய 2 மகன்களையும் மர்ம மனிதர்கள் தாமிரபரணி ஆறு பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. 3 பேர் உடல்களையும் ஆற்றில் வீசிவிட்டு, அவர்கள் 3 பேரும் ஆற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என திசைதிருப்ப நடந்த முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம்“ என்று கூறினர்.

Related Tags :
Next Story