பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம்
இரவோடு இரவாக பஸ் கட்டணத்தை உயர்த்திய அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தி.மு.க. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாகர்கோவில்,
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, இரவோடு இரவாக பஸ் கட்டணத்தை உயர்த்திய அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., முஸ்லிம் லீக், த.மு.மு.க. ஆகிய கூட்டணி கட்சிகளோடு இணைந்து 27-ந்தேதி (இன்று) காலை 10 மணி அளவில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக மக்களை வாட்டி வதைக்கின்ற வகையில் சர்வாதிகார போக்கில் உயர்த்திய பஸ் கட்டணத்தை திரும்பப்பெற மறுக்கும் அ.தி.மு.க. ஆட்சியை கண்டிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து போராட எனது (சுரேஷ்ராஜன்) தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் குமரி மாவட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், துணைத்தலைவர்கள், செயலாளர்கள், துணைச்செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக்கழக செயலாளர்கள், துணைச்செயலாளர்கள், முன்னாள், இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் அந்தந்த அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து போராடி, தமிழகத்தை மீட்டெடுக்க வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story