ஈரோட்டில் வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு,
வணிகத்துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பேரவை மாவட்ட தலைவர் பி.தேவதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜோசப், பொருளாளர் காளிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ராஜ், துணைச்செயலாளர்கள் ராஜா, வடிவேல், ஜமீன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story