குடியரசுதின விழா: ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் கலெக்டர் பிரபாகர் தேசியக்கொடி ஏற்றினார்
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடந்த குடியரசுதின விழாவில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
ஈரோடு,
இந்திய குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசுதினவிழா ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு மைதானம் வண்ண கொடிகள் மற்றும் தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மைதானத்தில் கொடிமேடை அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று காலை 8 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் அரசு மரியாதையுடன் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி மற்றும் அதிகாரிகள் வரவேற்று கொடி மேடைக்கு அழைத்து வந்தனர். சாகர் மெட்ரிக் பள்ளிக்கூட மாணவர்கள் பேண்டு வாத்திய இசை முழங்க மரியாதையுடன் முன் சென்றனர்.
கொடி மேடைக்கு சென்ற கலெக்டர் எஸ்.பிரபாகர் இந்திய தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்தார். அப்போது அங்கு கூடி இருந்த அதிகாரிகள், மாணவ-மாணவிகள், காவல்துறையினர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் ‘சல்யூட்‘ செய்து தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது. திறந்த ஜீப்பில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு நின்று கொண்டு அணிவகுப்பினை பார்வையிட்டனர். பின்னர் போலீசாரின் படை அணிவகுப்பு நடந்தது. ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் ஆண்-பெண் போலீசார் படை அணிவகுப்பு நடத்தினார்கள். அவர்களை தொடர்ந்து ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை ஆண் மற்றும் பெண் பிரிவினர் அணிவகுத்து வந்தனர். போலீஸ் பெருவங்கி இசைக்குழுவினர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், வினோதினி, காயத்திரி, ரவி, பாலமுரளிதரன், சுகவனம், நெப்போலியன் உள்பட 46 போலீசார் நற்சான்றிதழ் பெற்றனர். இதுபோல் பல்வேறு துறைகளையும் சேர்ந்த அரசு பணியாளர்கள், சமூக தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மொத்தம் 204 பேர் சான்றிதழ் பெற்றனர்.
ஈரோடு மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்றி வரும் 37 போலீசார் மற்றும் சிறப்பு இலக்கு படையில் பணியாற்றி வரும் 3 போலீசார் என 40 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் அணிவிக்கப்பட்டது.
மேலும், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. கலெக்டர் எஸ்.பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஆர்.டி.ஓ. நர்மதாதேவி ஆகியோர் சால்வை அணிவித்தனர்.
விழாவில் வருவாய்த்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் 15 பேருக்கு ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 25 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 5 பேருக்கும், தாட்கோ சார்பில் 38 பேருக்கும், வேளாண்மைத்துறை சார்பில் ஒருவருக்கும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஒரு நபருக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பேருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 93 பேருக்கு ரூ.50 லட்சத்து 12 ஆயிரத்து 88 நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து கொடி மேடைக்கு வந்த கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டனர். பின்னர் பள்ளி-கல்லூரி மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Related Tags :
Next Story