உலகை சுற்றிவரும் ‘டீக்கடை’ தம்பதி..!
கேரளாவில் டீக்கடை நடத்தும் விஜயனுக்கு தனது மனைவி மோகனாவுடன் உலகை சுற்றிவந்து, உலக நகரங்களை ரசிக்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்திருக்கிறது.
ஆம்.., டீக்கடை நடத்துபவரின் உலக சுற்றுலா ஆசை நிறைவேறிவிட்டது. இதுவரை எகிப்து, ஜோர்டான், பாலஸ்தீனம், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா... என பல உலக நாடுகளை மனைவியோடு சுற்றிப்பார்த்திருக்கிறார். அதுபற்றி விஜயன் சொல்கிறார்...
“எனக்கு 67 வயதாகிறது. மனைவி மோகனாவிற்கு 65 வயது. எங்களுக்கு சசிகலா மற்றும் ஆஷா என இரண்டு மகள்கள். வாழ்க்கை முழுவதும் மகள்களின் திருமணத்திற்காகவே பணம் சேர்த்து கொண்டிருந்ததால், மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது மகள்களின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. அதற்கு பிறகாவது எங்களுக்காக வாழ ஆசைப்பட்டோம். குடும்பத்துக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த மோகனாவை உலக நாடுகளுக்கு அழைத்து செல்ல ஆசைப்பட்டேன். அதற்காக பணத்தையும் சேமித்தேன். நினைத்தபடியே 2008-ம் ஆண்டு எங்களுடைய முதல் பயணம் தொடங்கியது. எகிப்து, ஜோர்டானிற்கு பறந்து சென்றோம். அங்கு பிரபல நகரங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, மீண்டும் கேரளாவிற்கு திரும்பினோம்” என்பவர், உலக சுற்றுப் பயணம் மேற்கொள்வதை ஒரு பழக்கமாகவே தொடர ஆரம்பித்துவிட்டார்.
டீக்கடை நடத்துபவர் உலக சுற்றுலா செல்வது ஆச்சரியத்தை உண்டாக்கினாலும், அதுவே உண்மை. தன்னுடைய மனைவிக்காக பல உலக சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து, பல உலக நகரங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறார். டீக்கடை நடத்தி பணம் சேர்ப்பது, வருட இறுதியில் உலக சுற்றுலா செல்வது என... விஜயன்-மோகனா தம்பதியினர், வயது கடந்தும் வாழ்க்கையை ரசிக்கின்றனர்.
“முதல் பயணத்திற்கு சுலபமாக பணம் திரட்டிவிட்டோம். ஆனால் இரண்டாவது பயணத்திற்கான பணத்தை திரட்டுவது பெரும் போராட்டமாக மாறியது. கையில் இருந்த பணத்துடன், மீதி பணத்திற்கு வங்கியில் கடன் வாங்கினோம். ஆச்சரியமாக வங்கி மேலாளர் கடன் வழங்கி, இரண்டாவது பயணத்திற்கு அனுப்பிவைத்தார். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவ... பிரபலங்களின் நிதி உதவிகள் கிடைத்தன” என்று சந்தோஷப் படும் மோகனா, அடுத்தடுத்த பயணங்களுக்கு பிரபலங்களிடம் இருந்து பணம் குவிந்ததையும் விளக்கினார்.
“உலகில் சில நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பல ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. ஏனெனில் அடுத்தடுத்த உலக சுற்றுலாக்களுக்கு அக்கம் பக்கத்திலிருந்தும், கேரள பிரபலங்களிடமிருந்தும் பண உதவி குவிந்தது. சில நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து எங்களை உலக நாடுகளுக்கு சுற்றுலா அனுப்பி வைத்தன. நடிகர்கள் அமிதாப்பச்சன், அனுபம் கேர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் உட்பட ஏராளமானோர் நிதி உதவி செய்தனர். அவர்களின் உதவியால் நாங்கள் பல நாடுகளை சுற்றிப்பார்த்தோம். சமீபத்தில் கூட துபாய் நகரை இலவச பயணத்தில் ரசித்தோம்” என்று மோகனா முடிக்க, விஜயன் தொடர்ந்தார்.
“வயதான காலத்தில் உலக சுற்றுலா சென்று என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று சிரித்தவர்கள் எல்லாம், இன்று மனம் மாறி எங்களுக்கு உதவுகிறார்கள். அந்தளவிற்கு நாங்கள் பல நாடுகளை சுற்றிவந்துவிட்டோம். இதில் சில பயணங்கள், சில நல்ல உள்ளங்களின் உதவியால் நிகழ்ந்தவை. சமீபத்தில் துபாய் சென்றுவந்ததும் அப்படிதான். உலகின் பல நாடுகளுக்கு சென்று வந்தாலும் துபாய் சென்றுவரவேண்டும் என்பது நிறைவேறாத ஆசையாக இருந்தது. அதை ‘அரூஹா’ என்ற தனியார் சுற்றுலா நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டபோது, அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஷித் அப்பாஸ் தாமாகவே முன்வந்து எங்களுக்கு உதவினர். விமான டிக்கெட் தொடங்கி துபாயை சுற்றிப்பார்த்து மீண்டும் கேரளா திரும்பியது வரை அனைத்து செலவையும் அவர்களே ஏற்றுக்கொண்டனர்.
துபாய் நகர சுற்றுலா, துபாய் சபாரி பூங்கா, புர்ஜ் கலீபா, குளோபல் வில்லேஜ், மிராக்கிள் கார்டன்... என துபாயில் 4 நாட்கள் தங்கவைத்து, ஒவ்வொரு முக்கிய சுற்றுலா தகவல்களையும் சுற்றிகாண்பித்தனர். எங்களுக்கு அடுத்ததாக சீனாவை சுற்றிப்பார்க்கும் ஆசையும் இருக்கிறது. மேலும் துருவ பகுதியான அண்டார்டிக்கா செல்வதையும் உலக சுற்றுலாவின் முக்கிய அம்சமாக கருதுகிறோம். அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றவர், மனைவி மோகனாவை பார்த்து சிரிக்கிறார். அடுத்த சுற்றுலா வெகு விரைவில் என்பவர்கள், அதற்காக டீக்கடையில் கடுமையாக உழைக்கின்றனர்.

Related Tags :
Next Story