அ.தி.மு.க. ஆட்சியை தமிழக மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் ச.ம.க. தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி
தமிழக மக்கள் அ.தி.மு.க. ஆட்சியை விரைவில் தூக்கி எறிவார்கள் என்று ச.ம.க. தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.
தூத்துக்குடி,
தமிழக மக்கள் அ.தி.மு.க. ஆட்சியை விரைவில் தூக்கி எறிவார்கள் என்று ச.ம.க. தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.
நடிகர்கள்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் நடக்க உள்ள சமத்துவ மக்கள் கழகத்தின் 3–ம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்த கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் நேற்று தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;–
தமிழகத்தில் நடிகர்கள் கட்சி தொடங்கி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர். போல் ஆகிவிட முடியாது. ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் என்று கூறுகிறார். அப்படி கூறி அவரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. கமல்ஹாசன், இப்போது தான் கண்ணாடி மாளிகையில் இருந்து வெளியே வருகிறார். ரஜினியின் வேகம் 50 அடி தூரம் வரைக்கு தான். அதன் மேல் அவரால் நடக்க முடியாது. இப்படி இருக்கையில் அவர் எப்படி தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்வார்?. இவர்களால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
விரைவில்....
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. இலவசம் என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பஸ் கட்டண உயர்வை பல மடங்கு உயர்த்தி, மக்களை தண்டித்து வருகிறார்கள். இந்த ஆட்சி நிலைக்காது. தமிழக மக்கள் இந்த ஆட்சியை விரைவில் தூக்கி எறிந்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story