கிராம சபை கூட்டங்களை புறக்கணித்த பொதுமக்கள்
கடம்பத்தூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்களை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமத்தில் கிராம சபைகூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக செஞ்சி, பானம்பாக்கம், செஞ்சி மதுராகண்டிகை போன்ற பகுதியில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தார்கள். கூட்டத்தில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சாந்தி மற்றும் அதிகாரிகள் வந்திருந்தார்கள். கூட்டம் தொடங்கியதும் தீர்மான புத்தகத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகள் குறித்து எழுதப்பட்டு இருந்தது.
இதில் பானம்பாக்கம் காலனியில் 126 மின்விளக்குகள் அமைத்ததற்காக ரூ.75 ஆயிரத்து 909 செலவு செய்யப்பட்டுள்ளது எனவும், செஞ்சி மதுராகண்டிகையில் பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு அமைத்ததாக ரூ.80 ஆயிரமும் எழுதப்பட்டு இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் செய்யப்படாத பணிக்கு கணக்கு காட்டி எழுதப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், செஞ்சி ஊராட்சியில் கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தரவில்லை. பானம்பாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயும், சாலை வசதியும் செய்து தரப்படவில்லை என புகார்களை கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் செஞ்சி ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) விஜயராகவன் பொதுமக்களின் எந்த ஒரு அடிப்படை தேவையையும் செய்யாமல் இருந்து வருகிறார். அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். அப்போது பொதுமக்கள் ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்து தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தார்கள்.
கடம்பத்தூர் ஒன்றியம் கடம்பத்தூரில் நேற்று முன்தினம் பகல் 12 மணி ஆகியும் கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் அருகில் உள்ள சேவை மையத்தில் கிராமசபை கூட்டம் நடத்துவதாக தெரிவித்தார்கள்.
அங்கு சென்ற பொதுமக்கள் அங்கு இருந்த ஊராட்சி செயலாளர் சரவணன் ஏன் கிராம சபை கூட்டம் நடத்துவது தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிடவில்லை எனவும், கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சியில் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, தெருவிளக்கு வசதி போன்றவற்றை முறையாக செய்து தரவில்லை என கூறி கூட்டத்தை புறக்கணித்தார்கள். இதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வீரராகவன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்து முடிந்தது.
கடம்பத்தூர் ஒன்றியம் தண்டலம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்ல கூவம் ஆற்றில் புதிய மேம்பாலம் கட்டிதர வேண்டும். அடிப்படை வசதிகளான சாலை வசதி, பஸ் வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு வசதியும் எங்களுக்கு செய்து தரப்படவில்லை எனவும், ஊராட்சியில் எந்த பணியையும் மேற்கொள்ளாத ஊராட்சி செயலாளர் வெங்கடேசனை பணியிட மாற்றம் செய்ய வேணடும் என குற்றம் சாட்டினார்கள். அப்போது அங்கு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தார்கள்.
பின்னர் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். பின்னர் அதிகாரிகள் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஊராட்சி செயலாளர் மீது விசாரணை நடத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

Related Tags :
Next Story