குழந்தை இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை


குழந்தை இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 28 Jan 2018 4:00 AM IST (Updated: 28 Jan 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி ரம்யா (வயது 21). இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை அக்டோபர் மாதம் 23-ந்தேதி மஞ்சள் கமாலை நோயால் பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து ரம்யா துக்கத்தில் இருந்து வந்தார். குழந்தை இறந்த துக்கத்தில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்த செங்கல்பட்டு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

Next Story