பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஏழை எளிய மக்களை வெகுவாக பாதிக்கும் வகையில், பஸ் கட்டணத்தை உயர்த்தி யதை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற கோரியும் பெரம்பலூரில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்.
பெரம்பலூர்,
ஏழை எளிய மக்களை வெகுவாக பாதிக்கும் வகையில், பஸ் கட்டணத்தை உயர்த்தி யதை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற கோரியும் பெரம்பலூரில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர் வரதராஜன், மாவட்ட செயலாளர் துரைராஜ், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், இந்திய தொழிலாளர் மக்கள் முன்னேற்றக் கழக மாநில தலைவர் ஈசுவரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் சர்புதீன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story