ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
அரசலூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தனர்
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரில் ஜல்லிக்கட்டு நடத்துவது என விழாக்குழுவினர் முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி கேட்டிருந்தனர். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது காளைகள் நிறுத்தப்படும் இடத்தில், மழை, வெயிலில் பாதிக்காமல் இருக்க கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், காளை ஓடும் பகுதியின் இரண்டு புறங்களிலும் பார்வையாளர்கள் பாதிக்கப்படாத வகையில், உறுதியான இரும்பு சட்டங்கள் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு இரண்டு அடுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். மேலும், காளைகள் கடைசியாக வந்தடையும் இடத்தில் அவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதா என்றும் பார்வையிட்டனர்.
ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வரும் காளைகள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனருக்கு, மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார். 12 மணிக்குள் பதிவு செய்யப்படும் காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், நிகழ்ச்சியின்போது பொதுமக்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் உதவும் வகையில் தன்னார்வலர்கள் இருக்க வேண்டும் என்றும், மாடுபிடி வீரர்களுக்கும் விழாக்குழுவினருக்கும் தனித்தனி நிறங்களில் சீருடை வழங்க வேண்டும் என்றும் விழாக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
காளையை அடக்குவோர் 15 மீட்டர் தூரத்திற்கு திமிலை மட்டுமே பிடித்துக்கொண்டு செல்லவேண்டும். வால் மற்றும் காது போன்றவற்றை பிடிக்கக்கூடாது, அவ்வாறு செய்யும் வீரர்களை விழாக்குழுவினர் உடனடியாக காவல்துறையினரின் உதவியோடு வெளியேற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். போட்டி நடைபெறும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பட்சத்தில், உடனடி சிகிச்சை அளிக்கும் பொருட்டு, மருத்துவர்களும், அவசர ஊர்திகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் மற்றும் விழாக்குழுவினர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story