திருச்சியில் கள்ளத்துப்பாக்கி விற்க முயன்ற போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது
திருச்சியில் கள்ளத்துப்பாக்கி விற்க முயன்ற போலீஸ்காரர் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் துப்பாக்கி மற்றும் கள்ளநோட்டுகளுடன் மர்ம கும்பல் வருவதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த 2 பேர் ரெயிலில் இருந்து தப்பி ஓடியபோது, சென்னை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் துரத்திச்சென்று திருவொற்றியூரில் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி மற்றும் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து கள்ளத்துப்பாக்கிகளை விலைக்கு வாங்கி வந்து, அதை விற்பனை செய்ய இருந்தது தெரிந்தது. மேலும் விசாரணையில் இதேபோன்று கள்ளத்துப்பாக்கிகளை தஞ்சையை சேர்ந்த 2 பேர் விற்பனைக்காக வைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் தஞ்சை மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கள்ளத்துப்பாக்கியை விற்பனை செய்ய திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிலர் தங்கி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று திருச்சி வந்தனர். பின்னர் திருச்சி போலீசாருடன் இணைந்து மத்திய பஸ் நிலையத்தில் உள்ள அந்த ஓட்டல் அறையில் அதிரடியாக புகுந்து, அங்கிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 2 துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் இருப்பதும், அவைகள் கள்ளத்துப்பாக்கி என்றும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரித்ததில் ஒருவரது பெயர் பரமேஸ்வரன் என்றும், இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரிந்தது. மற்றவர்கள் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த நாகராஜ், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சிவா என்றும் தெரிந்தது. அவர்கள் கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2 கள்ளத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள் மற்றும் போலீஸ்காரருக்கான அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 3 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து, அவர்கள் கள்ளத்துப்பாக்கியை எங்கிருந்து, யாரிடம் வாங்கி வந்தார்கள்? அதை திருச்சியில் யாருக்கு விற்பனை செய்ய இருந்தார்கள். அல்லது வேறு ஏதாவது நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளத்துப்பாக்கிகளை விற்க முயன்ற போலீஸ்காரர் உள்பட 3 பேர் நேற்று திருச்சியில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கைது செய்யப்பட்டு உள்ள 3 பேரையும் தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

Related Tags :
Next Story