சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியது ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியது ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 28 Jan 2018 4:15 AM IST (Updated: 28 Jan 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியது ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

செங்கம்,

செங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று அதிகாலை தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் லாரியின் முன் சக்கரங்கள், அச்சு உள்ளிட்டவை முறிந்தது. டீசல், லாரியின் என்ஜீன் ஆயில் உள்ளிட்டவை சாலையில் கொட்டி ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

பின்னர் லாரியில் உள்ள சரக்குகளை வேறு லாரிக்கு மாற்றப்பட்டு. விபத்துக்கு உள்ளான லாரியை மீட்கப்பட்டது.

இதனால் வாகனங்கள் செல்ல மாற்று வழி இல்லாததால் காலை முதல் மதியம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதே இடத்தில் ஒரு கார் உள்பட 6 லாரிகள் இந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.

சாலையின் 2 பக்கமும் உள்ள உயர் மின்அழுத்த கம்பிகளில் உரசாமல் செல்ல வேண்டியுள்ளதாகவும், மேலும் சாலையோர கடைகள் அதிகமாக உள்ளதாலும், இரவு நேரங்களில் சாலையில் தெருவிளக்குகள் எரியாததாலும், தடுப்புச்சுவர் குறித்து எந்தவிதமான ஒளி பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களோ, எச்சரிக்கை பலகைகளோ இல்லாததால் இந்த விபத்து தொடர்ந்து நடைபெறுவதாகவும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த விபத்தினை தடுக்க முடியவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

பேரூராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அரசுதுறைகள் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தடுப்புச்சுவர்களை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story