தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதைக்கண்ட வேதனையில் விவசாயி சாவு
முத்துப்பேட்டை அருகே அறுவடைக்கு தயாரான நிலையில் பயிர்கள் கருகியதை கண்ட வேதனையில், விவசாயி பரிதாபமாக இறந்தார்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் ராதா(வயது 60). விவசாயியான இவர், அருகில் உள்ள இஞ்சடிகோட்டகத்தில் உள்ள தனக்கு சொந்தமான வயலில் 2 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளார்.
கடுமையான வறட்சி, ஏமாற்றிய பருவமழை ஆகியவற்றால் 2 முறை தெளித்து வீணாகிய பிறகு 3-வது முறையாக தெளித்த பயிர் தற்போது வளர்ந்து அறுவடைக்கு வரும் நிலையில் தண்ணீர் இல்லாததால் வளர்ந்த பயிர் கருக தொடங்கி உள்ளதை கண்டு கடந்த சில நாட்களாக விவசாயி ராதா, வேதனை அடைந்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று தான் சாகுபடி செய்த வயலுக்கு சென்ற விவசாயி ராதா, கருகிய பயிர்களை நீண்ட நேரம் பார்த்தபடி இருந்தார். அப்போது வேதனையில் அவருக்கு ‘திடீர்’ என்று மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
வயலுக்கு சென்ற விவசாயி ராதா, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் பதறிய அவரது குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவர் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு வந்த ராதாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் ராதாவின் உடலை மீட்டு அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர். இறந்த ராதாவிற்கு அஞ்சம்மாள் என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. ஆடலரசன், மரணம் அடைந்த விவசாயி ராதா வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிவேல், ஒன்றிய துணைச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.
கருகிய பயிரை கண்டு விவசாயி ஒருவர் வேதனையில் மரணம் அடைந்த சம்பவம் அந்த கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story