கும்பகோணத்தில் காரில் கடத்தி வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
கும்பகோணத்தில் காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்களை கடத்தி வந்த நபர்கள் தங்களை பிடிக்க மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது மோட்டார் சைக்கிளை மோதி விட்டு தப்பி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கவரை தெருவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று காரை சோதனை செய்தனர். அப்போது காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.
அந்த காரை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முயன்றனர். அப்போது 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், தனது மோட்டார் சைக்கிளில் அவர்களை துரத்தி சென்றார். அப்போது அவர்கள் இருவரும் தாங்கள் சென்ற மோட்டார் சைக்கிளால் சப்-இன்ஸ்பெக்டர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டருடைய மோட்டார் சைக்கிளின் முன்புற சக்கரம் சேதம் அடைந்தது. இதனால் அவர் நிலைதடுமாறினார். உடனே அவர்கள் இருவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தங்களது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்று அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி சென்றவர்களில் ஒருவர் கும்பகோணம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிட்டப்பா மகன் வெங்கடேசன்(வயது29) என்பது தெரிய வந்தது. மற்றொருவர் யார்? என தெரியவில்லை. மேலும் இவர்கள் காரில் மதுபாட்டில்களை வெளிமாநிலத்தில் இருந்து கும்பகோணத்துக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனிடையே மதுபாட்டில்களுடன் இருந்த காரையும், மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதுதொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story